2026 September 24, Thursday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 35°
LIVE
அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும் – ITAKசபாநாயகர் முன்னிலையில் ஹபீப் ரிஃபான் சத்தியப்பிரமாணம்உபாதையால் ஹசரங்க அணியிலிருந்து விலகல்மூன்று நாள் அமெரிக்க விஜயத்தை தொடங்கிய ஜி ஜின்பிங்அனோஜனை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைநீதித்துறை திருத்தம் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை; மழை பாதிப்பு தொடரும்எரிபொருள் விலையில் மாற்றமா? மானியமா? பேச்சுவார்த்தை தீவிரம்

அனோஜனை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

உள்ளூர்September 24, 2026 · 2 hours முன்5
அனோஜனை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இன்று (23) புதன்கிழமை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் Anthony V. Pirnot ஆகியோரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பாராளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், சன்முகம் குகதாசன் மற்றும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்சந்திப்புகளில் கலந்துகொண்டனர்.

இதன்போது, சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலை தொடர்பாகவும், அவரை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட முயற்சிகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசரத் தேவையை முன்னிறுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது.