2026 September 23, Wednesday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 26° ☀️ மட்டக்களப்பு 36°
LIVE
மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்இலங்கைக்கு அனுப்பப்பட்ட குஷ், ஹசீஸ் சிக்கியது!ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது – இலங்கையில் மழை தொடரும்!உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழியச் சிறை!இருநாட்டு நலன்களை முன்னேற்ற வலுவான நிகழ்ச்சி நிரல் – எரிக் மேயர்உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 169வது இடம்!நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!

இலங்கைக்கு அனுப்பப்பட்ட குஷ், ஹசீஸ் சிக்கியது!

உள்ளூர்September 23, 2026 · 2 hours முன்3
இலங்கைக்கு அனுப்பப்பட்ட குஷ், ஹசீஸ் சிக்கியது!

வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட ‘குஷ்’ மற்றும் ‘ஹசீஸ்’  போதைப்பொருள் தொகையை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைப்பற்றியுள்ளனர்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலுக்கு அமைய, தனியார் கூரியர் சேவை ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட 3 கிலோகிராம் 599 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளும், 2 கிலோகிராம் 409 கிராம் ‘ஹசீஸ்’ போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுங்கப் பிரிவினரின் பொறுப்பில் இருந்தபோதே இந்த போதைப்பொருள் தொகையை புலனாய்வு அதிகாரிகள் மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.