2026 November 7, Saturday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

உள்ளூர்September 23, 2026 · 2 months முன்9
மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் நீதிச்சேவையின் சிறப்புப் பிரிவு அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றும் நீதிச்சேவையின் சிறப்புப் பிரிவு அதிகாரியான ஆனந்தி கனகரத்னம் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் நீதிச்சேவையின் சிறப்புப் பிரிவு அதிகாரியான ஞானேச லலித் கன்னங்கர ஆகியோரே இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (23) காலை அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவும் கலந்துகொண்டார்