2026 November 6, Friday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

2019 தாக்குதல் வழக்கில் இன்று முக்கிய நீதிமன்ற தீர்ப்பு

உள்ளூர்September 22, 2026 · 2 months முன்6
2019 தாக்குதல் வழக்கில் இன்று முக்கிய நீதிமன்ற தீர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்படவுள்ளது. 

இதனால் இன்றைய தினம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பல விசேட பொலிஸ் குழுக்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பே இன்றைய தினம் இவ்வாறு அறிவிக்கப்படவுள்ளது. 

இன்று காலை புதுக்கடை மேல்நீதிமன்றத்தில் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. 

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இவ்வழக்கில் 2,309 முறைப்பாட்டாளர்கள் சாட்சியமளித்திருந்தனர். 

கடந்த ஒகஸ்ட் 24 ஆம் திகதி சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்திருந்தது.