2026 September 20, Sunday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 23° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது இங்கிலாந்துமழையுடன் மண்சரிவு அபாயமும் – மக்கள் விழிப்புடன் இருங்கள்!பல பகுதிகளில் கனமழை – சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகம்!மோட்டார் வாகனப் பதிவு பிரச்சினைகளுக்கு புதிய WhatsApp இலக்கம்!வெளிநாட்டில் உள்ள பெசில் ராஜபக்ஷவை கண்டறிய சர்வதேச நடவடிக்கை!பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம் குறித்து சந்திரிகா உருக்கமான பதிவு!ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் வசூலிக்க வேண்டாம் – பிரதமர் அறிவுறுத்தல்!

மழையுடன் மண்சரிவு அபாயமும் – மக்கள் விழிப்புடன் இருங்கள்!

உள்ளூர்September 20, 2026 · 3 hours முன்5
மழையுடன் மண்சரிவு அபாயமும் – மக்கள் விழிப்புடன் இருங்கள்!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது தவிர, காலி மாவட்டத்தின் நாகொட, களுத்துறை மாவட்டத்தின் பாலின்தநுவர, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) மாலை 7.00 மணி முதல் நாளை மாலை 7.00 மணி வரை அமலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.