2026 November 4, Wednesday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

11 வயது சிறுவனின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை!

உள்ளூர்September 19, 2026 · 2 months முன்9
11 வயது சிறுவனின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை!

11 வயது சிறுவன் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற காணொளி ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இலங்கை காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இந்த காணொளியை அடுத்து சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் (Children and Women Bureau) விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, காவல்துறை பிரதி காவல்துறை மா அதிபர் தர்ஷிகா குமாரியின் அறிவுறுத்தலின் பேரில், காவல்துறை அதிகாரிகள் செப்டம்பர் 18 அன்று கனேமுல்ல பகுதியில் உள்ள சுமேதா மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் குறித்த சிறுவனைக் கண்டறிந்தனர்.

அத்துடன், பாதுகாப்பற்ற சூழலில் இருந்த அந்தச் சிறுவன் பாதுகாப்புக் காவலில் எடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன், அவரின் தாயாருடன் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரது நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.