2026 September 14, Monday 🌧️ கொழும்பு 30° 🌧️ யாழ்ப்பாணம் 33° 🌧️ கண்டி 31° ⛈️ மட்டக்களப்பு 31°
LIVE
உலக தடகளத்தில் இலங்கைக்கு பொன்னான தருணம்!செப்டம்பர் 13 நாட்களில் 2,146 டெங்கு நோயாளர்கள்!வறட்சியால் யாலாவின் 1, 2 மண்டலங்கள் மூடப்பட்டன!மத்திய கிழக்கு பதற்றம்; எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றம்!5 மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!22ஆவது திருத்தத்தை தோற்கடிக்க மக்கள் சக்தி திரட்டும் சஜித்!36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியின் பிடியில்!இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை 15 இலட்சத்தை கடந்தது!

தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு விரிவாகும்!

உள்ளூர்September 13, 2026 · 1 day முன்5
தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு விரிவாகும்!

தாய்லாந்து தொழில் அமைச்சரின் அழைப்பிற்கமைய, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் நாளை (14) முதல் 16 ஆம் திகதி வரை தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.


இந்த விஜயத்தின் போது தாய்லாந்தின் தொழில் அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் பதில் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.


அத்துடன், தொழில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களை வேலைவாய்ப்பில் அமர்த்துவது தொடர்பான உடன்படிக்கை என்பவற்றில் கையெழுத்திடுவதன் மூலம் இரு தரப்பினரும் தொழில் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவர்.


இந்தப் பயணம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு, இடம்பெயர்வு மற்றும் தொழிலாளர் இடப்பெயர்வு ஆகிய துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், மக்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது.