2026 September 14, Monday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 32° 🌧️ கண்டி 30° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
செப்டம்பர் 13 நாட்களில் 2,146 டெங்கு நோயாளர்கள்!வறட்சியால் யாலாவின் 1, 2 மண்டலங்கள் மூடப்பட்டன!மத்திய கிழக்கு பதற்றம்; எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றம்!5 மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!22ஆவது திருத்தத்தை தோற்கடிக்க மக்கள் சக்தி திரட்டும் சஜித்!36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியின் பிடியில்!இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை 15 இலட்சத்தை கடந்தது!ஜாவா கடலில் மாயமான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது!

புதிய பொது முகாமையாளர் நியமனம் கோரும் தொழிற்சங்கங்கள்!

உள்ளூர்September 13, 2026 · 1 day முன்5
புதிய பொது முகாமையாளர் நியமனம் கோரும் தொழிற்சங்கங்கள்!

ரயில்வே திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய ரயில்வே பொது முகாமையாளர் ஒருவரை அரசாங்கம் துரிதமாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு இல்லாவிட்டால், பல ரயில் தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை நிச்சயமாக முன்னெடுப்போம் என அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இந்தப் பணிப்புறக்கணிப்புக்காக வரலாற்றில் முதன்முறையாக ரயில் பயணிகள் சங்கங்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுமேத சோமரத்ன மேலும் குறிப்பிட்டார்.

ரயில் தாமதங்கள் உள்ளிட்ட பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் முறையான தீர்வுகள் கிடைக்கப்பெறாமையால், தமது சங்கமும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஹீந்தெனிய, பட்டிபொட ஐக்கிய ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஆர்.ஏ.ரணதுங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகப் ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு நாளை (14) போக்குவரத்துப் பிரதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளைய தினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் முறையான தீர்வுகள் கிடைக்கப்பெறாவிட்டால், திட்டமிட்டபடி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனப் ரயில்வே தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.