2026 October 17, Saturday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நெருக்கடிகளை சமாளிக்க பொறுப்புகளை செயலாக்கமாக மாற்ற வேண்டும் – ஹரிணி

உள்ளூர்September 2, 2026 · 2 months முன்20
நெருக்கடிகளை சமாளிக்க பொறுப்புகளை செயலாக்கமாக மாற்ற வேண்டும் – ஹரிணி

“ஒன்றோடொன்று இணைந்திருக்கும் இன்றைய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மாத்திரம் போதுமானதல்ல. நாம் எமது விழிப்புணர்வைக் கூட்டுச் செயல்பாடாகவும், எமது பொறுப்புகளை அளவிடக்கூடிய முடிவுகளாகவும் மாற்ற வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

பூட்டானில் நேற்று (01) நடைபெற்ற உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டின், “தருணத்திற்கு ஏற்றவாறு எழுச்சி பெறுதல் – பலவித நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்” (Rising to the Moment – Igniting Consciousness to Address the Polycrisis) எனும் தலைப்பிலான உயர்மட்டக் குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அதாவது, காலநிலை நடவடிக்கைகள், விவசாயத் துறையைப் புத்தாக்கப்படுத்துதல், பொறுப்புமிக்க நுகர்வு, உணவு விரயத்தைக் குறைத்தல், விவசாயிகளுக்கான ஆதரவு மற்றும் ஊட்டச்சத்திற்கான சமமான வாய்ப்புகள் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் மீள்திறன்மிக்க, அனைவரையும் உள்ளடக்கிய, நிலைத்தன்மை வாய்ந்த அதேவேளையில் நியாயமான உணவு முறைமைகளைக் கட்டியெழுப்புவதாகும். 

அபிவிருத்தியும் நிலைத்தன்மையும் இணைந்து முன்னோக்கிச் செல்லும் ஓர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக சர்வதேச ஒத்துழைப்பையும், காலநிலை நிதி மற்றும் தொழில்நுட்ப அணுகலையும் நாம் பலப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.