2026 September 2, Wednesday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 30° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
காஸாவில் சுகாதாரப் பேரழிவைத் தடுக்க இன்னும் காலம் உள்ளது – WHO!ஆரோக்கியத்திற்கு விலை உயர்ந்த பழங்கள் அவசியமா?காலையில் செய்யும் இந்த உணவுப் பழக்கங்கள் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்!சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடும் உயர்வு!செல்சீயிலிருந்து மென்செஸ்டர் சிட்டிக்கு என்சோ பெர்னாண்டஸ்!மகளிர் ஆசியக் கோப்பையில் சமரியின் அதிரடி தொடர்கிறது!சர்வதேச தரவரிசையில் புதிய சாதனை படைத்த சமரி!அமெரிக்க தா#க்குதலுக்கு ஈரான் பதிலடி!

கடற்பரப்புகளில் மணிக்கு 60 கி.மீ. வரை பலத்த காற்று!

உள்ளூர்September 2, 2026 · 3 hours முன்5
கடற்பரப்புகளில் மணிக்கு 60 கி.மீ. வரை பலத்த காற்று!

மழை நிலைமை : சிலாபத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

கடல் நிலை : ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 

காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.