2026 August 20, Thursday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
முன்னாள் கடற்படைத் தளபதிக்கும் யோஷிதவுக்கும் பிணை!PHI அதிகாரிகள் நாளை வேலைநிறுத்தம்!வெளியில் பணியாற்றுவோருக்கு அதிக அபாயம்!அதிகரிக்கும் வெப்பம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!22வது திருத்தம் தொடர்பில் நாளை பாராளுமன்றத்தில் முக்கிய நகர்வு!22வது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள்!கட்டுநாயக்கவில் நீர்த்தாரை மரியாதையுடன் வியட்ஜெட் விமானத்திற்கு வரவேற்பு!பெரஹராவை முன்னிட்டு வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!

PHI அதிகாரிகள் நாளை வேலைநிறுத்தம்!

உள்ளூர்August 20, 2026 · 3 hours முன்5
PHI அதிகாரிகள் நாளை வேலைநிறுத்தம்!

இன்று (20) முதல் நாடு தழுவிய ரீதியில் அனைத்து டெங்கு கட்டுப்பாட்டுக் கடமைகளில் இருந்தும் விலகுவதற்கு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் சிரேஷ்ட சுகாதார வைத்திய அதிகாரியை தன்னிச்சையாக இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று (19) இரவு கூடிய தமது சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துக்குட குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு மேலதிகமாக, நாளை (21) நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.