2026 October 14, Wednesday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கட்டுநாயக்கவில் நீர்த்தாரை மரியாதையுடன் வியட்ஜெட் விமானத்திற்கு வரவேற்பு!

உள்ளூர்August 19, 2026 · 2 months முன்14
கட்டுநாயக்கவில் நீர்த்தாரை மரியாதையுடன் வியட்ஜெட் விமானத்திற்கு வரவேற்பு!

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை வழங்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட் (Vietjet Air Line), தனது சேவையை ஆரம்பிக்கும் வகையில் அதன் முதல் விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்த வருகையின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், இதன் தலைமை விமானி மற்றும் உதவி விமானி ஆகிய இருவரும் இலங்கையர்கள் ஆவர்.

பாணந்துறையைச் சேர்ந்த திவங்க சில்வா மற்றும் மொரட்டுவையைச் சேர்ந்த ரந்தீர் பெரேரா ஆகியோரே அவ்வாறு விமானத்தை இயக்கி வந்தோராவர்.

வியட்ஜெட் விமான சேவையின் VJ-1875 என்ற இலக்கமுடைய முதலாவது கன்னி விமானம், நேற்று (18) இரவு 09.33 மணிக்கு 169 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 

பின்னர் அந்த விமானம் 171 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் வியட்நாமின் ஹோசிமின் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.

இந்த விமான சேவை செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் வாரத்திற்கு 3 நாட்கள் வியட்நாமின் ஹோசிமின் நகர விமான நிலையத்திற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையே இயக்கப்படவுள்ளது.

இவ்விமானத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீர்த்தாரை வழங்கி  வரவேற்பளிக்கப்பட்டது.