2026 October 9, Friday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வெளியில் பணியாற்றுவோருக்கு அதிக அபாயம்!

உள்ளூர்August 19, 2026 · 2 months முன்12
வெளியில் பணியாற்றுவோருக்கு அதிக அபாயம்!

நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, சூரிய ஒளி நேரடியாக உடலில் படுவதால் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும் என்றும், கடுமையான பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உயிரிழப்புகள் கூட ஏற்படக்கூடும் என்றும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

சிறுவர்கள், முதியவர்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளியில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள், குறிப்பாக காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் சூரிய ஒளியில் அதிக நேரம் நடமாடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், போதுமான அளவு நீர் அருந்துமாறும், இளநிற ஆடைகளை அணியுமாறும் சுகாதார அமைச்சு மேலும் அறிவுறுத்தியுள்ளது.