2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
பிள்ளையனின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!பாராளுமன்றத்தில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சமர்ப்பிப்பு!முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு பிணை!மேலதிகமாக 6 பணியாளர்களை நியமித்த விவகாரத்தில் கெஹெலிய கைது!மட்டக்களப்பு, அம்பாறை, மொணராகலையில் குடிநீர் விநியோகத்திற்கு நடவடிக்கை!வாக்குமூலம் அளிக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த கெஹெலிய!இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு பிணை!

உள்ளூர்August 18, 2026 · 2 hours முன்7
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு பிணை!

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆகியோரைப் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஊழில் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

அதன்படி, ஒவ்வொரு சந்தேகநபரும் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதவான், சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்லத் தடையும் விதித்து உத்தரவிட்டார்.