2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மெகசின் சிறைச்சாலையின் பரபரப்பு… தற்போது நிலைமை சீரானது

உள்ளூர்August 7, 2026 · 2 months முன்5
மெகசின்  சிறைச்சாலையின்   பரபரப்பு… தற்போது நிலைமை சீரானது

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு (6) ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 

சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறைச்சாலைச் சுவருக்கு மேல் உள்ளே வீசப்பட்ட சிறிய பொதி ஒன்றை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதை அடுத்து, கைதிகள் சிலர் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது. 

இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை அறை ஒன்றின் பூட்டை உடைத்து 40க்கும் மேற்பட்ட கைதிகள் வெளியே வந்திருந்ததுடன், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவர்களை மீண்டும் சிறைக் கூடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். 

இதற்கிடையில், சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். 

நிலைமையைக் கண்காணிப்பதற்காக இலங்கை விமானப்படையின் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.