2026 October 9, Friday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 33° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சீரற்ற வானிலை! பாடசாலை விடுமுறைக்கு அதிபர்களுக்கு அதிகாரம்

உள்ளூர்August 3, 2026 · 2 months முன்5
சீரற்ற வானிலை! பாடசாலை விடுமுறைக்கு அதிபர்களுக்கு அதிகாரம்

மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

​நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

​இதற்கமைய, ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

​அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

​இது தொடர்பில் அனைத்து வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.