2026 October 9, Friday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

களனி கங்கை அபாய நிலை! மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்!

உள்ளூர்August 3, 2026 · 2 months முன்4
களனி கங்கை அபாய நிலை! மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாகக் களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வௌ்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 

​ முதலாம் கட்டத்தின் நேற்று முன்தினம் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

​ அந்த அறிவித்தல் அடுத்த 48 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

​ அதற்கமைய, குறித்த அறிவித்தல் 5 ஆம் திகதி காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

​ இந்நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

​ இதனிடையே, அப்பகுதிகள் ஊடான உப வீதிகளில் பயணிக்கும் சாரதிகளும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.