2026 October 9, Friday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பொதுநலவாய போட்டியில் இலங்கையின் பொன்னான வெற்றி!

உள்ளூர்August 1, 2026 · 2 months முன்4
பொதுநலவாய போட்டியில் இலங்கையின் பொன்னான வெற்றி!

2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

இலங்கை நேரப்படி இன்று காலை இப்போட்டி நிறைவடைந்தது. 

கிளாஸ்கோவில் உள்ள ஸ்காட்ஸ்டவுன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ருமேஷ் தனது இரண்டாவது முயற்சியில் 89.75 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்தச் சிறப்பான வெற்றியைப் பெற்றுக்கொண்டார். 

இது பொதுநலவாய விளையாட்டுத் தொடரில் இலங்கை வெல்லும் 6ஆவது தங்கப் பதக்கமாகும். 

2006ஆம் ஆண்டு பளுதூக்கும் வீரர் சிந்தன விதானகே தங்கப் பதக்கம் வென்றதற்குப் பிறகு, 20 ஆண்டுகள் கழித்து இலங்கை வெல்லும் முதலாவது தங்கப் பதக்கமும் இதுவாகும்.