2026 October 9, Friday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அமெரிக்கா–ஈரான் பதற்றம் மீண்டும் தீவிரம்!

உலகம்August 1, 2026 · 2 months முன்8
அமெரிக்கா–ஈரான் பதற்றம் மீண்டும் தீவிரம்!

ஈரானுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக்குதல்களை நடத்தத் தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி, ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதலைத் தொடங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இராணுவத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், “நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம்.. ஒரு கட்டத்தில் அவர்களால் இதை இனி தாங்க முடியாது என்று அவர்களே கூறுவார்கள்..” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற எரிசக்தி வசதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்துவதில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இருப்பினும், உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் போர்க் குற்றங்களின் கீழ் வரக்கூடும் என மனித உரிமைகள் மற்றும் ஆலோசனை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.