2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

முன்னாள் அமைச்சரின் மகன் தொடர்பான வழக்கில் புதிய முன்னேற்றம்!

உள்ளூர்July 27, 2026 · 3 weeks முன்1
முன்னாள் அமைச்சரின் மகன் தொடர்பான வழக்கில் புதிய முன்னேற்றம்!

நிதி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித் பண்டார உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

சந்தேகநபர்களை இன்று (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடையையும் விதித்துள்ளார். 

சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலேயே, முன்னாள் அமைச்சரின் புதல்வர் உள்ளிட்ட குறித்த 5 சந்தேகநபர்களும் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.