2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்: எதிர்க்கட்சிகள் அவசர ஆலோசனை!

உள்ளூர்July 23, 2026 · 3 weeks முன்2
நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்: எதிர்க்கட்சிகள் அவசர ஆலோசனை!

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் யோசனை தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நடத்தும் விசேட கலந்துரையாடல் தற்போது கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 

இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் இக்கூட்டம் நடத்தப்படுகின்றது.