2026 October 9, Friday ☀️ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 29° ☀️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

23 டெங்கு அபாய வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று முதல் அதிரடி நடவடிக்கை!

உள்ளூர்July 5, 2026 · 3 months முன்8
23 டெங்கு அபாய வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று முதல் அதிரடி நடவடிக்கை!

மேல் மாகாணத்திலுள்ள 23 டெங்கு அதி அபாய வலயங்களை உள்ளடக்கும் வகையில் இன்று (05) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த விசேட நடவடிக்கை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் ஒருங்கிணைப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. 

சுகாதாரப் பிரிவினர், முப்படைகள், பொலிஸார், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட பல அரச மற்றும் சமூகப் பிரதிநிதித்துவத் தரப்பினரின் கூட்டுப் பங்களிப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

டெங்கு ஒழிப்புக்காகப் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்குடன், மேல் மாகாணத்தின் 23 டெங்கு அதி அபாய வலயங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.