நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

எல் நினோ வானிலை நிலவக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பயிர்ச்செய்கைக்குத் தேவையான பாசன நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு விவசாயிகளை நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
சிறுபோகப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீர் நீர்த்தேக்கங்களில் போதுமான அளவு உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பி.எஸ்.டி. ஹெரத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வரவிருக்கும் பெருபோக பருவப் பயிர்ச்செய்கை எல் நினோ (El Niño) வானிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், அதனால் நீரை மிகவும் சிக்கனமாகவும், திறமையாகவும் பயன்படுத்துமாறு விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.




