2026 September 21, Monday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛈️ கண்டி 24° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
அனோஜன் குடும்பத்துக்கு சஜித் உறுதி – விடுதலைக்காக தொடரும் முயற்சிவிமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜர் – பிடியாணையை திரும்பப் பெற கோரிக்கை!உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ஜனாதிபதி மன்னிப்பை நாடும் ஞானசார தேரர்!தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!மின்னல் மற்றும் பலத்த காற்று – மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும் மானியத்தில் கட்டுப்படுத்துவோம் – ஜனாதிபதி!சஜித் பிரேமதாச – UAE தூதர் சந்திப்பு: வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி நிலை குறித்து பேச்சு!சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!

16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடக கட்டுப்பாடு!

தொழில்நுட்பம்May 23, 2026 · 4 months முன்12
16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடக கட்டுப்பாடு!

மலேசிய இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணையத்தில் எதிர்கொள்ளும் அபாயங்கள் மற்றும் எதிர்மறையான தாக்கங்களைக் குறைக்கும் நோக்கில், எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்த அந்தநாட்டின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானித்துள்ளது.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவு செய்வதையும், அவற்றை வைத்திருப்பதையும் கட்டுப்படுத்துவது இதன் முதன்மை நோக்கமாகும்.

அத்துடன், இணைய வழியிலான தவறான தகவல்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் கட்டுப்படுத்தப்படும்.

அந்த நாட்டு ஊடக அறிக்கைகளின்படி, சிறுவர்களுக்கு வயதுக்கு ஏற்ற பாதுகாப்பை வழங்குவதற்கும், அதிக ஆபத்துள்ள இணைய சேவைகளின் பயன்பாட்டை அவர்கள் கட்டுப்படுத்துவதற்கும் இந்த புதிய நடைமுறை வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.