2026 October 11, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று!

உள்ளூர்May 18, 2026 · 5 months முன்3
17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று!

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் 17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (18) வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பொது இடங்களில் ஆத்மசாந்தி பிரார்த்தனைகள், மலரஞ்சலி நிகழ்வுகள், தீபம் ஏற்றுதல் மற்றும் அமைதிப் பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவிடப் பகுதிக்கு பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.