2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 34° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கண்தானத்தில் முன்னுதாரணமாகத் திகழும் இலங்கை மக்கள்!

உள்ளூர்May 11, 2026 · 5 months முன்9
கண்தானத்தில் முன்னுதாரணமாகத் திகழும் இலங்கை மக்கள்!


இலங்கையில் வாழும் மக்களில் 84 சதவீதமானோர் கண்தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி, தேசிய கண் வங்கி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளில், அந்த வங்கிக்குக் கிடைத்த 17,000 விழிவெண்படலங்கள் 12,000 நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், ஏனைய நாடுகளின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு இணங்க, 4,000 முதல் 5,000 வரையிலான விழிவெண்படலங்கள் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான இந்த தேசிய கண் வங்கியிடமிருந்து விழிவெண்படலங்களைப் பெற்றுக்கொள்வதற்கு சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்து விசேட கேள்வி நிலவுவதாகவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.