2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

சுற்றுலாப் பயணிகளின் வருகை 9 இலட்சத்தைக் கடந்தது.

உள்ளூர்May 9, 2026 · 3 months முன்0
சுற்றுலாப் பயணிகளின்  வருகை  9 இலட்சத்தைக் கடந்தது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 9 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல் மே 6 வரை மொத்தமாக 904,855 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகளவில் வருகை தந்தவர்கள் இந்தியப் பிரஜைகள் ஆகும். அவர்களின் எண்ணிக்கை மட்டும் 200,796 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல், பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கணிசமான அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மே மாத ஆரம்பத்தில் மட்டும் (1 முதல் 6 வரை) 28,578 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என அதிகார சபை கூறுகிறது.

எனினும், ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.