2026 October 11, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 35° 🌧️ கண்டி 26° ⛈️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

5% மின்சார நுகர்வோருக்கு அதிர்ச்சி: கட்டணம் 18% உயர்வு அறிவிப்பு

BREAKINGஉள்ளூர்May 9, 2026 · 5 months முன்6
5% மின்சார நுகர்வோருக்கு அதிர்ச்சி: கட்டணம் 18% உயர்வு அறிவிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்ததாவது, இந்த காலாண்டு மற்றும் அடுத்த காலாண்டில் சுமார் ரூ.38 பில்லியன் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையால், மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கம் ரூ.15 பில்லியன் நிவாரண நிதியை வழங்க எழுத்துப்பூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளதால், இந்த கட்டண திருத்தம் அனைத்து நுகர்வோரையும் பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மொத்த மின் நுகர்வோரில் சுமார் 5 சதவீதமானவர்களுக்கு மட்டுமே இந்த கட்டண அதிகரிப்பு பொருந்தும் எனவும், மீதமுள்ள 95 சதவீத நுகர்வோருக்கு எந்தவித தாக்கமும் இருக்காது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.