2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சீரமைப்பு முடிந்தும் வடக்கு ரயில் சேவை இன்னும் நிறுத்தம் – வடக்கு ரயில் பயணிகள் அவதி!

உள்ளூர்May 2, 2026 · 5 months முன்3
சீரமைப்பு முடிந்தும் வடக்கு ரயில்  சேவை இன்னும் நிறுத்தம் – வடக்கு ரயில் பயணிகள் அவதி!

டித்வா புயலினால் சேதமடைந்த மன்னார் மற்றும் வடக்கு ரயில் பாதைகளின் திருத்தப்பணிகள் நிறைவடைந்துள்ள போதிலும், ‘யாழ் தேவி’ உள்ளிட்ட பல ரயில்கள் இன்னும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

‘உத்தர தேவி’ கடுகதி ரயில்கூட இதுவரை சேவையில் இணைக்கப்படவில்லை என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

ஏனைய பாதைகளிலும் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதான ரயில்கள் இவ்வாறு இயக்கப்படாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்து கருத்துத் தெரிவித்த அந்தச் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு போக்குவரத்து அமைச்சிடம் எந்தவொரு திட்டமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.