2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஜனாதிபதி – இந்தியத் துணைத் தலைவர் சந்திப்பு!

உள்ளூர்April 19, 2026 · 6 months முன்1
ஜனாதிபதி – இந்தியத் துணைத் தலைவர் சந்திப்பு!

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் , இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

இந்தியாவின் ‘அயலாரே முன்னுரிமை’ கொள்கைக்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர், இரு நாடுகளினதும் நலனுக்காக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதியளித்தார்.

இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் இலங்கையில் ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.