2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஈரானுக்கு சாதகமான காலம்: அமெரிக்காவிற்கு நெருக்கடி!

உலகம்April 11, 2026 · 4 months முன்2
ஈரானுக்கு சாதகமான காலம்: அமெரிக்காவிற்கு நெருக்கடி!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈரானிய தரப்பு அதிக பலத்துடன் காணப்படுவதாகவும், நேரம் அமெரிக்காவிற்கு எதிராக நகர்வதாகவும் இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னாள் வானூர்திப்படை அதிகாரி மசூத் அக்தர் இவ்விடயம் தொடர்பில் தெரிவித்தாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமாபாத்தில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தைகளில், உலகளாவிய எரிபொருள் விநியோகத்திற்கு அத்தியாவசியமான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கச் செய்வதே அமெரிக்காவின் முதன்மை இலக்காகும்.

அத்துடன் ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் சர்வதேச ஆய்வாளர்கள் பார்வையிட அனுமதிப்பதையும் அமெரிக்கா வலியுறுத்துகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளிடமிருந்து பாரிய தாக்குதல்களை எதிர்கொண்ட போதிலும், ஈரான் தனது அணுசக்தி கொள்கை மற்றும் ஏவுகணை கையிருப்பு போன்ற விடயங்களில் எவ்வித மாற்றத்தையும் செய்யாது என அக்தர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், லெபனான் மற்றும் ஏமன் போன்ற நாடுகளில் உள்ள தனது ஆதரவுப் படைகள் தொடர்பான விடயங்களில் ஈரான் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் ஈரானிய தரப்பிற்கே அதிக செல்வாக்கு உள்ளது.

அவர்கள் நிதானமாகச் செயற்படுகின்றனர். ஆனால், அமெரிக்காவிற்கு நேரம் மிகக் குறைவாகவே உள்ளது” என மசூத் அக்தர் எச்சரித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உள்நாட்டு அழுத்தம் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை விரைவாகத் திறக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா உள்ளமை குறிப்பிடத்தக்கது.