2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

ஆகஸ்ட் வரை எரிபொருள் போதுமானது என ஏமாற்ற வேண்டாம் : நாமல் கடும் எதிர்ப்பு

உள்ளூர்April 8, 2026 · 4 months முன்1

ஒகஸ்ட் மாதம் வரை எரிபொருள் இருப்பதாகக் கூறி ஏமாற்ற வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையைற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டபோது, எங்களிடம் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாக அரசாங்கம் கூறியது. மக்களைப் பயப்பட வேண்டாம் என்றார்கள். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. தேர்தலுக்கு முன் நிவாரணப் பொதிகள் தருவதாகக் கூறினார்கள், இப்போது அவை இல்லை. தகரம் ஒன்று சேதமடைந்தால் கூட 10 லட்சம் தருவதாக ஜனாதிபதி கூறினார். ஆனால் கொடுக்கப்பட்ட காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளன.”

வரிக்கு மேல் வரி விதிப்பதால் சாதாரண மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. செஸ் வரியை நீக்கியதால், கிராமங்களில் சுயதொழில் செய்யும் பெண்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு நெருக்கமான கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே இதனால் இலாபம் கிடைக்கிறது. அரிசி விலை 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளது, ஆனால் விவசாயியின் வருமானம் உயரவில்லை.”

மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் மே மாதம் வரை காலம் தாழ்த்துவது ஏன் என்றும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், திட்டமிட்ட முறையில் மக்களைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து அப்புறப்படுத்தி, டீசல் மின் உற்பத்தி நிலையங்களை நோக்கித் தள்ளுவதன் பின்னால் பாரிய முறைகேடு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.