2026 October 16, Friday ⛈️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கடும் வெப்பம் அதிகரிப்பு – வளிமண்டலவியல் எச்சரிக்கை!

உள்ளூர்April 6, 2026 · 6 months முன்5
கடும் வெப்பம் அதிகரிப்பு – வளிமண்டலவியல் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வெப்ப அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பச் சுட்டெண்’நாட்டின் பல மாகாணங்களில் ‘அவதானம்’ செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இந்த வெப்ப அதிகரிப்பு நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.நாள் முழுவதும் போதியளவு தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொண்டு உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும்.

முடிந்தவரை நிழலான இடங்களில் தங்கியிருப்பதுடன், அவ்வப்போது வேலைகளுக்கு மத்தியில் ஓய்வு எடுத்துக்கொள்ளவும்.இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிறத்திலான ஆடைகளை அணியவும்.

கடுமையான வெயில் நிலவும் நேரங்களில் கடினமான வெளிப்புற வேலைகள் மற்றும் உடற்பயிற்சிகளைக் குறைத்துக்கொள்ளவும்.முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மேலதிக கவனம் செலுத்துவதுடன், அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும்.

தொடர்ச்சியாக நிலவும் இந்த வானிலை மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.