2026 November 2, Monday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌫️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

8 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம்

உள்ளூர்January 31, 2026 · 9 months முன்1
8 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 8 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதில் இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இடமாற்றம் பெற்றுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள்: 

பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஈ.எம்.ஜி.ஜே. சேரம்: காலி பிரிவிலிருந்து, ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.சி.ஏ. புஷ்பகுமார: காலி பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இடமாற்றம் பெற்றுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச்.ஈ.எல். பெரேரா: கம்பளைப் பிரிவிலிருந்து கொழும்பு வடக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.என். குணவர்தன: மொனராகலைப் பிரிவிலிருந்து பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.ஆர். புஷ்பகுமார: கொழும்பு வடக்கு பிரிவிலிருந்து விசேட விமான நிலையப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ. உதய குமார: வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பதவியிலிருந்து களுத்துறைப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எம்.எஸ்.பி. விக்ரமசிங்க: பொலிஸ் தலைமையகத்தின் மேலதிக தலைமையக நிர்வாகப் பணிப்பாளராக இருந்து, மொனராகலைப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கண்டி பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றிய பி.டி. இலங்ககோன் கம்பளைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.