2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்த சஜித்

உள்ளூர்January 31, 2026 · 7 months முன்1
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்த சஜித்

தங்களைக் கல்விச் சேவையில் உடனடியாக உள்வாங்குமாறு கோரி இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) காலை வருகை தந்தார்.

இந்தப் போராட்டக்காரர்கள் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

எவ்வாறாயினும்இ தமது போராட்டத்தைச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றியதைத் தொடர்ந்துஇ அதில் ஈடுபட்டிருந்த சிலரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.