2026 October 14, Wednesday 🌧️ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் 508 சந்தேகநபர்கள் கைது

உள்ளூர்February 22, 2026 · 8 months முன்4
பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் 508 சந்தேகநபர்கள் கைது

பொலிஸாரால் நேற்று (21) நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 28,369 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிடியாணை பெற்றவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் 19

பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 325

திறந்த பிடியாணை பெற்றவர்கள் 210

மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியவர்கள் 226

அலட்சியமாக வாகனங்களைச் செலுத்தியவர்கள் 44

ஏனைய வாகனக் குற்றங்கள் 3,681

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, இவ்வாறான விசேட பொலிஸ் நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.