2026 October 26, Monday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 21° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

2026 – இன் முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் வருகை

உள்ளூர்January 28, 2026 · 9 months முன்4
2026 – இன் முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் வருகை

2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

 குறித்த காலப்பகுதியில், ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை ஜனவரி 15 ஆம் திகதி பதிவாகியுள்ளதுடன், அன்றைய தினம் 10,483 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அதிகார சபை கூறுகிறது. 

 இந்த 25 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 41,603 ஆகும். இதற்கு மேலதிகமாக, ரஷ்யாவிலிருந்து 22,876 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,329 பேரும், ஜேர்மனியிலிருந்து 14,431 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.