2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

உள்ளூர்January 28, 2026 · 7 months முன்2
ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

அரசாங்க நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்த காலத்தில், தனது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றபோது, அரசாங்க நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

2025 ஆகஸ்ட் 22 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று தனிப்பட்ட பிணைகளில் அவரை விடுவிக்க கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 2025 அக்டோபர் 29ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதுஇ இது தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து 2026 ஜனவரி 28ஆம் திகதியான இன்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.