2026 October 18, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

செம்மணியில் இன்று – 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு.

உள்ளூர்July 22, 2026 · 3 months முன்4
செம்மணியில் இன்று – 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு.

யாழ் – செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40ஆவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 94 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 471 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 455 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இன்றைய தினம் புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் 08பேர் கொண்ட குழுவினர் அகழ்வு பணியை நேரில் பார்வையிட்டதுடன், அகழ்வு பணிகளில் ஈடுபட்ட நிபுணர்குழுவினருடன் அகழ்வுபணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர் என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார்.