2026 October 31, Saturday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

உள்ளூர்January 15, 2026 · 10 months முன்5
யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர்.

வடமராட்சி திக்கம் பகுதியில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவை கடத்தி செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை பொலிஸார் வழி மறித்துள்ளனர்.

அதனை அடுத்து இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளையும், தாம் கொண்டு எடுத்து சென்ற பயண பொதியையும் (சூட்கேஸ்) கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

கைவிட்டு சென்ற பயண பொதியை பொலிஸார் சோதனை செய்த போது, அதனுள் உடுப்புக்களின் கீழ் பொதி செய்யப்பட்ட நிலையில் சுமார் 12 கிலோ கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ள பொலிஸார் தப்பி சென்ற இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.