2026 November 1, Sunday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 26° 🌫️ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலட்ச ரூபாய் பெறுமதியான அலங்காரச் செடிகளுடன் இளைஞன் கைது.

உள்ளூர்February 10, 2026 · 9 months முன்5
இலட்ச ரூபாய்  பெறுமதியான அலங்காரச் செடிகளுடன் இளைஞன் கைது.

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி ஒருவர் இன்று அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சுங்கத் திணைக்களத்தின் உயிர்ப்பல்வகைமை, கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இணைந்து இந்தச் சோதனையை முன்னெடுத்தனர். 

இன்று அதிகாலை 12.35 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸின் TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

அவர் கொண்டு வந்த 3 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 386 அலங்கார மலர்ச் செடிகள் கைப்பற்றப்பட்டன. 

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.