2026 October 9, Friday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

உள்ளூர்August 15, 2026 · 2 months முன்12
திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

குறித்த நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன்  மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (14) மாலை இடம் பெற்றது. பெரெண்டினாவின் கல்வி ஆதரவு திட்டங்களில் ஒன்றாக, ஆண்டுதோறும் குறைந்த வருமானம் கொண்ட பெரெண்டினா பயனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு Bright Students Scholarship திட்டத்தின் மூலம் உதவி வழங்கி வருகின்றது. 

இந்த உதவித்தொகை கல்வித் தராதர உயர்தர பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அத்தியாவசியமான மாதாந்த செலவுகளை ஈடு செய்ய பெரிதும் பங்களிக்கிறது.  ​​இந்தத் திட்டத்தின் மூலம் வருடந்தோறும் 550க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கி ஆதரவளிப்பதில் பெரெண்டினா நிறுவனம் பெருமிதம் கொள்கின்றது. 

இந் நிகழ்வானது பெரெண்டினா திருகோணமலை பிரதேச வலய முகாமையாளர்  இ.திருச்செல்வம் தலைமையில் இடம் பெற்றது பிரதம விருந்தினராக பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர்  என்.   மதிவண்ணன்

சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி  பிரதி அதிபர் திருமதி. தர்மிலா இளஞ்செல்வன்  மற்றும் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. ஹரிஹரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பெரெண்டினா  திருகோணமலை  கிளை  முகாமையாளர் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 2025 கல்வி ஆண்டுக்குரிய உயர்தர மாணவர்களுக்கு காசோலைகளும் அத்துடன் 9A பெறுபெற்றை பெற்ற மாணவர்களுக்கு காசோலைகளும் அப்பியாச புத்தகங்களும் நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.