2026 October 26, Monday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண் கைது

உள்ளூர்January 1, 2026 · 10 months முன்4
அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்  கைது

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில், அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்ததாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலின் போது, அந்தப் பெண் குறித்த நபரின் நெஞ்சுப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், தலைமறைவாகியிருந்த சந்தேக நபரான பெண்ணை நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்ட பெண்ணை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.