2026 October 24, Saturday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை : ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!

உள்ளூர்December 8, 2025 · 11 months முன்4
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை : ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த விடுதி ஒன்றிற்கும் தனியார் நிறுவனமொன்றிற்கும் ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பெலிஹூல்ஓயா பிரதேசத்தில் உள்ள குறித்த விடுதியானது, 100 ரூபாவிற்கு விற்கப்பட வேண்டிய ஒரு லீற்றர் குடிநீர் போத்தல் ஒன்றை 400 ரூபாவிற்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில், குறித்த நிறுவனத்திற்கு எதிராக பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அந்த அதிகார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்போது பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் குறித்த விடுதிக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

அதேவேளை, 70 ரூபாவிற்கு விற்கப்பட வேண்டிய 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தல் ஒன்றை அந்த விலையை விட அதிகமாக 230 ரூபாவிற்கு விற்பனை செய்த பண்டாரவளை எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றிற்கு எதிராகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், இதன்போது குறித்த நிறுவனத்திற்கும் ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.