2026 October 22, Thursday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

SLPPயை விட்டு வெளியேறிய சோமரதன தேரர்

உள்ளூர்February 14, 2026 · 8 months முன்3
SLPPயை விட்டு வெளியேறிய  சோமரதன தேரர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் செயற்பாடுகள் காரணமாக, அக்கட்சியின் கலென்பிந்துனுவெவ பிரதேச சபை உறுப்பினராகப் பணியாற்றிய வணக்கத்திற்குரிய அநுராதபுர சோமரதன தேரர் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். 

அதற்கமைய, அவர் சர்வஜன அதிகாரம் கட்சியின் மிஹிந்தலை தொகுதி அமைப்பாளர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். 

திஸ்ஸகுட்டி ஆராச்சி அநுராதபுர மக்கள் தொடர்பில் வெளியிடும் சில கருத்துக்களும் அவரது செயற்பாடுகளுமே தாம் கட்சியிலிருந்து விலகக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறான நிலை தொடர்ந்தால், அநுராதபுர மாவட்டத்தில் பொதுஜன பெரமுன தனிமைப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.