2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

வெனிசுவேலாவுக்கு மீண்டும் விமான சேவை

உலகம்January 30, 2026 · 7 months முன்0
வெனிசுவேலாவுக்கு மீண்டும் விமான சேவை

அமெரிக்காவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையே சுமார் ஆறு ஆண்டுகளாகத் தடைப்பட்டிருந்த நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்கப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் ஷான் டஃபி, 2019 முதல் நடைமுறையில் இருந்த விமானத் தடையை உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ளார்.

வெனிசுவேலலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸுடன் (Delcy Rodríguez) நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். “அமெரிக்க குடிமக்கள் மிக விரைவில் வெனிசுவேலாவுக்குச் செல்ல முடியும், அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்” என அவர் உறுதியளித்துள்ளார்.

1987 முதல் வெனிசுவேலாவில் இயங்கி வந்த இந்த நிறுவனம், அரசு ஒப்புதல்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்குப் பின்னர் தினசரி விமான சேவைகளை ஆரம்பிக்கும். இது வணிகம், சுற்றுலா பயணங்களுக்கு உதவும் .

இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க இராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ (Operation Absolute Resolve) என்ற அதிரடித் தாக்குதலில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து வெனிசுவேலாவின் அரசியல் சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது .