2026 October 12, Monday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ☀️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்:32 பேர் பலி!

உலகம்June 25, 2026 · 4 months முன்6
வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்:32 பேர் பலி!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். 

வெனிசுலாவின் தலைநகர் கராகஸுக்கு அருகில் இன்று (25) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதுடன், இதன் தாக்கம் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளது. 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, மொண்டல்பான் பகுதியிலிருந்து 13.2 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 7.1 ரிக்டர் அளவாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

நிலநடுக்கம் காரணமாக கராகஸில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், அங்கிருந்த மக்கள் அந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவிக்கிறது. 

இதற்கிடையில், வெனிசுலாவில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதுடன், இதனால் தலைநகரிலுள்ள சில கட்டிடங்கள் இடிந்து விழுந்து கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

இந்த இரு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து வெனிசுலா மற்றும் அதற்கு அருகிலுள்ள கரீபியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன