2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

இந்தோனேசியா ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகை வீச்சு.

உலகம்September 3, 2025 · 12 months முன்2
இந்தோனேசியா ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகை வீச்சு.

இந்தோனேசியாவின் இரண்டு பல்கலைக்கழகங்களின் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் உள்ளிட்ட அரசாங்கச் செலவினங்களை எதிர்த்து தலைநகர் ஜகார்த்தாவில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவின.

அந்த வன்முறையில் குறைந்தபட்சம் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக இந்தோனேசியாசிய மூத்த அமைச்சர் ஐர்லாங்கா ஹார்தார்ட்டோ இன்று கூறினார்.

அந்த ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக இரு பல்கலைக்கழகங்களின் முன்பு கூட்டம் கூடியது.

ஜகார்த்தாவில் இருந்து 140 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாசுந்தான் பல்கலைக்கழகம், பண்டுங் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னால் திரண்ட கூட்டங்களைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதாக அதிகாரிகள் கூறினர்.

இருப்பினும், காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையவில்லை என்று காவல்துறை அதிகாரியான ஹெண்ட்ரா ரோச்மாவன் தெரிவித்தார்.