பிரான்ஸ் பிரதமராக மீண்டும் செபஸ்டியன் லெகோர்னு.

பிரான்ஸின் பிரதமராக மீண்டும் செபஸ்டியன் லெகோர்னு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செபஸ்டியன் லெகோர்னு கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி பிரதமராக பதவியேற்றிருந்தாலும், அரசியல் குழப்பங்களின் காரணமாக 27 நாட்களில் பதவி விலகினார்.
அதன் பின்னர், 48 மணிநேரத்தில் புதிய பிரதமர் நியமிக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் லெகோர்னுவே பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.




