2026 October 23, Friday ⛅ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் உயிரிழப்புகள் அதிகரிப்பு

உலகம்October 3, 2025 · 1 year முன்12
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் உயிரிழப்புகள் அதிகரிப்பு

பிலிப்பைன்ஸில் கடந்த 30ஆம் திகதி 6.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரையில் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சுமார் 200 பேர் வரையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து மலைப்பகுதி கிராமங்களில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இம் மண்சரிவில் சிக்கி பலர் புதையுண்டனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அச்சம் கொள்ளப்படுகிறது.